கொல்கத்தா : மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை 28-ம் தேதி மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து, சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இதுவரை பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கேரளா, டெல்லி, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளன. இப்போது மேற்கு வங்கமும் கொண்டுவர உள்ளது.
இதனிடையே சபாநாயகர் பிமான் பானர்ஜி தலைமையில் நேற்று முன்தினம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சிறப்புக் கூட்டத்தொடரை 2 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி கூறுகையில்,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும். சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தப்படும். விதி 185-ன் கீழ் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர உள்ளோம்.
ஒரே விவகாரத்தில் 2 தீர்மானங்களை, இரு விதிகளின் கீழ் கொண்டு வருவதால் என்ன பயன்? ஒரு தீர்மானத்தை அரசு தாக்கல் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஒரு விஷயத்துக்காக விதி 169, 185 போன்றவற்றைப் பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். அதேமயம், வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை எதிர்ப்போம் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.