முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவிலில் ஆறாட்டு திருவிழா மார்ச் 19-ல் துவக்கம்

வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2021      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்தர ஆறாட்டு திருவிழா மார்ச் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 12-ம் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 13-ம் தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் அடைக்கப்பட்டது. பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற மார்ச் மாதம் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 15-ம் தேதி முதல் மாத பூஜை 5 நாட்கள் நடைபெறும். அதைத்தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்தர ஆறாட்டு திருவிழா 19-ம் தேதி தொடங்குகிறது.  

அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறுகிறது. 27-ம் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடக்கிறது.  28-ம் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு நடைபெறுகிறது. அன்று மாலை கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து