முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியாவில் கோர சம்பவம்: புனித பயணம் மேற்கொண்ட 45 இந்தியர்கள் விபத்தில் பலி

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      உலகம்
Sauthi 2025-11-17

Source: provided

மெக்கா : சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் 79979-59754 அல்லது 99129-19545 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்டனர். அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்து விட்டு மதீனாவுக்கு பேருந்துசில் சென்று கொண்டு இருந்தனர். ஜோரா என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பேருந்து மீது டீசல் லாரி மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. 

இந்த கோர விபத்தில் பேருந்துசில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 45 இந்தியர்கள் பலியானார்கள். இதன் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 வயதான முகமது அப்துல் சோயிப் என்ற இளைஞர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.

இதுபற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க சவுதி அரசு கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது. இதன்படி, விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் 79979-59754 அல்லது 99129-19545 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவர் உயிர் பிழைத்த அதிசயம்

இந்த கோர விபத்தில் பேருந்துதில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 45 இந்தியர்கள் பலியானார்கள். இந்நிலையில், இந்த கோர விபத்தில் சிக்கி ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 வயதான முகமது அப்துல் சோயிப் என்ற இளைஞர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். முகமது அப்துல் சோயிப் ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணித்ததாக கூறப்படுகிறது. இவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து