உறைபனியால் உறைந்து போன நயாகரா நீர் வீழ்ச்சி : வலைதளங்களில் வைரலாகும் படங்கள்

புதன்கிழமை, 24 பெப்ரவரி 2021      உலகம்
Niagara 2021 02 24

Source: provided

டெக்சாஸ் : அமெரிக்காவின் உறைபனி காரணமாக நயாகரா நீர் வீழ்ச்சியில் பனி உறைந்து காணப்படுகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத பனியின் காரணமாக மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 20-க்கும் அதிகமானவர்கள் பனிக்கு பலியாகி உள்ள நிலையில் உண்மையான பலி எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை பெரும் பேரழிவு என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நயாகரா நீர் வீழ்ச்சி உறைபனி காரணமாக உறைந்து காணப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து