ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. அம்பா பிரசாத், நேற்று சட்டசபைக்கு குதிரையில் வந்தார்.
இதுபற்றி கூறிய அவர், மகளிர் தினத்தையொட்டி ஓய்வு பெற்ற கர்னல் ரவி ரத்தோர் இந்த குதிரையை பரிசாக வழங்கியதாகவும், அதில் சட்டப்பேரவைக்கு வந்திருப்பதாகவும் கூறினார். அம்பா பிரசாத், கடந்த 2019-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பார்காகோன் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்களில் மிகவும் இளையவர் ஆவார்.