முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை வென்றது மேற்கு இந்திய தீவுகள் அணி

திங்கட்கிழமை, 8 மார்ச் 2021
Image Unavailable

இலங்கைக்கு எதிரான 3-வது டி-20 போட்டியில் 3 சிக்சர்கள் விளாசிய ஃபேபன் ஆலனின் அதிரடி ஆட்டத்தால் இலங்கையை எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் மேற்கு இந்திய தீவுகள் அணி வென்றது.

கூலிட்ஜில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தாலும் ஸ்கோர் 131 ரன்களைத் தாண்ட முடியவில்லை. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸில் பயணம் மேற்கொண்டு ஆடிவரும் இலங்கை அணியை மே.இ.தீவுகள் 3-வது டி20-யில் வீழ்த்தி தொடரை 2-1 என்று கைப்பற்றி கோப்பையை வென்றது.19-வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஃபேபியன் ஆலன் 3 மிகப்பெரிய சிக்சர்களை விளாசினார்.

132 ரன்கள் இலக்கை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி இலக்கை விரட்டும் போது ஸ்பின்னர்கள் சண்டகன் (3/29), டிசில்வா (2/13) என்று அசத்த இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் என்று 18வது ஓவரின் போது வந்தது. 18 பந்துகளில் இலங்கை வெற்றிக்கு 27 ரன்கள் தேவை.

ஜேசன் ஹோல்டர் 18வது ஓவரில் விக்கெட்டை இழக்காமல் காத்தார். அதே வேளையில் ஒரு ஃப்ரீ ஹிட் பந்தில் பெரிய சிக்சரை அடித்தார். கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலை. அப்போதுதான் அகிலா தனஞ்ஜயா ஓவரில் ஃபேபியன் ஆலன் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார்.

ஒன்று மற்றும் மூன்று மற்றும் கடைசி பந்துகளில் 3 மிகப்பெரிய சிக்சர்களை விளாசினார். இதனையடுத்து ஒரு ஓவர் மீதம் வைத்து வென்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. ஆலன் 6 பந்துகளில் 21 ரன்கள் எடுத்ததோடு முன்னதாக 4 ஓவர் 13 ரன்கள் ஒரு விக்கெட் என்று பவுலிங்கிலும் அசத்தினார். இதனையடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து