Pakistan 2021 03 31

பாகிஸ்தானின் பொருளாதார ஒருங்கிணைப்பு கவுன்சில் (ஈ.சி.சி) புதன்கிழமை இந்திய சர்க்கரை, பருத்தி மற்றும் நூல் இறக்குமதி செய்வதற்கான கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகால தடையை நீக்கி உள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு 5 லட்சம் டன் வெள்ளை சர்க்கரையை இறக்குமதி செய்ய அனுமதி அளித்து உள்ளது. இதையடுத்து ஜூன் 30-ம் தேதி முதல் இறக்குமதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

பாகிஸ்தானில் பருத்தியின் தேவை அதிகமாக இருப்பதாலும், வெள்ளைச் சர்க்கரையின் விலை பாகிஸ்தானை விட இந்தியாவில் குறைவு என்பதாலும் 2 ஆண்டுகளாக இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் சில்லறை வர்த்த்கத்தில் சர்க்கரை விலை அதிகரித்து வருகிறது. அங்கு ஒரு கிலோ சர்க்கரை பாகிஸ்தான் ரூபாயில் 100 ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் மட்டுமே இந்தியாவிடமிருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்யப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

நிருபர்களை சந்தித்த பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஷேக் ரஷீத், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370-வது சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொடுக்காதவரை இந்தியாவிடமிருந்து பருத்தி மற்றும் சர்க்கரை வாங்குவதை ஒத்தி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil Comedy



Rhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kids



கிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review



இன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7



அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து