முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷியாவில் தொழிற்சாலையில் தீ விபத்து- 40 பேர் மீட்பு

செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

ரஷியாவின் 2-வது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வரலாற்று சிறப்பு மிக்க ஆடை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை நீண்ட வரலாற்றை கொண்டது.

இந்த நிலையில் தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ வேகமாக கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதனால் பயங்கர தீ கரும்புகையுடன் கொளுந்து விட்டு எரிந்தது.

உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் 350 தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தொழிற்சாலையில் சிக்கி இருந்த 40 பேரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மீட்பு பணியில் ஈடுபட்ட போது ஒரு தீயணைப்பு வீரர் பரிதாபமாக இறந்தார். 2 பேருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து தீயை அணைக்க வீரர்கள் போராடினர்.

பழமை வாய்ந்த இக் கட்டிடத்தில் 1841-ம் ஆண்டு முதல் ஆடைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த கட்டிடம் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் ஒரு முக்கிய அடையாளமாக திகழ்கிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து