முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் வளர்ச்சியைப் பரவலாக்கி அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்: முதல்வர்

வியாழக்கிழமை, 12 மார்ச் 2026      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, தமிழகத்தில் வளர்ச்சியைப் பரவலாக்கி அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம் என்றும், மாபெரும் தமிழ்க்கனவை சாத்தியப்படுத்துவோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கணினித் துறையில் தமிழ்நாடு உயர்ந்திடத் தலைவர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் உருவானவை டைடல் பூங்காக்கள். 

கடந்த 2016-21 அ.தி.மு.க. ஆட்சியின் இறுதிக்காலத்தில் ஒரே ஒரு டைடல் பூங்காவுக்கு மட்டுமே அடிக்கல் நாட்டினர். நமது திராவிட மாடல் ஆட்சியில், அவர்கள் அடிக்கல் நாட்டிய பட்டாபிராம் டைடல் பூங்காவை விரைந்து முடித்துத் திறந்தது மட்டுமல்ல, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய ஏழு இடங்களில், சுமார் 4,200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நியோ டைடல் பார்க்குகளை நிறுவித் திறந்து வைத்துள்ளோம்.

இதுமட்டுமின்றி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில், சுமார் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் டைடல் பார்க்குகளும், திருவண்ணாமலை, இராசிபுரம், நாகர்கோயில், திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஒன்பது இடங்களில், சுமார் 5,400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நியோ டைடல் பார்க்குகளும் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும், அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம். மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம். வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து