முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் நாளை 5-ம் கட்டவாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 15 ஏப்ரல் 2021      அரசியல்
Image Unavailable

மேற்கு வங்கத்தில் நாளை 17-ம் தேதி 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகின்றன. இதில் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5-வது கட்ட வாக்குப்பதிவு நாளை 17-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

இதில் வடக்கு 24 பா்கானாக்கள், டார்ஜிலிங், நாடியா, கலிம்போங், கிழக்கு பர்தமான் மற்றும் ஜல்பாய்குரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.  இதில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் மொத்தம் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 39 பேர் பெண்கள் ஆவர். இதற்காக அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த தொகுதிகளில் கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடந்து வந்தது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் மம்தா பானர்ஜி மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இதைப் போலவே பா.ஜ.க. சார்பில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல்வேறு தேசிய தலைவர்களும், மாநில தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி சார்பிலும் பல்வேறு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனால் மாநிலத்தில் தேர்தல் களம் களைகட்டியிருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் அனைத்தும் நேற்று (வியாழக்கிழமை) மாலையில்தான் முடிவடைந்திருக்க  வேண்டும்.  ஆனால் மாநிலத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நிகழ்ந்ததால் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரத்தை ஒருநாள் முன்கூட்டியே முடிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. குறிப்பாக பிரச்சாரத்துக்கும், வாக்குப்பதிவுக்கும் இடையேயான இடைவெளியை மேலும் 24 மணி நேரம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அங்கு 5-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் அனைத்தும் நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து