எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : இது குறித்து அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் - 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் அமலில் இருந்து வருகிறது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், சில புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் கடந்த 12-ம் தேதி தலைமைச் செயலர், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.
அதிகரித்து வரும் நோய் பரவலை கருத்தில் கொண்டு அனுமதிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. இருப்பினும், பொது மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது முகாம் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதை தொடர்ந்து பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன் நாளை 20-ம் தேதி அதிகாலை முதல் கீழ்க்காணும் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இரவு நேர ஊரடங்கு:-
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.
தமிழகத்தில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது.
மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து சேவைகளின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
பெட்ரோல் பங்க் செயல்படும்
எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம் மற்றும் ரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும். ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் (தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
அடையாள அட்டை
தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் (continuous process industries)மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு:-
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
பார்சல் சேவைக்கு அனுமதி
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகின்றது. மற்ற மின் வணிக நிறுவனங்களின் வேவைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி இல்லை. ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம்.
தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் (continuous process industries) மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
100 பேருக்கு அனுமதி
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்து கொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
மளிகை கடைகள் 9 மணி வரை செய்பட அனுமதி
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) (Big format stores) ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன், இரவு 9.00 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு கடந்த 10-ம் தேதி முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே குடமுழுக்கு/திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, கோயில் பணியாளர்கள், கோயில் நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, புதிதாக குடமுழுக்கு/திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள், தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
பிளஸ் -2 தேர்வு தள்ளிவைப்பு
பிளஸ் - 2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும் பிளஸ் 2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும். கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக வகுப்புகளை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லூரி /பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது.
கோடை முகாம்களுக்கு தடை
கோடை கால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் இணைந்து கோவிட் பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை ஆய்வு செய்து, தேவைப்படும் அனுமதியை வழங்கலாம். இத்தங்கும் விடுதிகளில் பிற வாடிக்கையாளர்களை தங்க வைக்கக் கூடாது.
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். கொரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான், நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள்அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டுமென தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க. எஃகு கோட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
13 Sep 2025சென்னை : பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-09-2025.
13 Sep 2025 -
திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
13 Sep 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
-
தங்கம் விலை சற்று சரிவு
13 Sep 2025சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வர
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
13 Sep 2025மாஸ்கோ : 7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது: கனிமொழி எம்.பி.
13 Sep 2025மணிப்பூர் : தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
-
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம்
13 Sep 2025சென்னை : மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு அரசு
13 Sep 2025சென்னை : மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக்: ஓமனை வீழ்த்தியது பாகிஸ்தான் 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி
13 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓமனை 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி எளிதில் வெற்றிப்பெற்றது.
-
மிசோரத்தில் ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
13 Sep 2025ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
-
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதிக்குள் தேர்தல் : இடைக்கால அரசு அறிவிப்பு
13 Sep 2025காத்மாண்டு : வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
-
கிரிக்கெட் உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி: அ.தி.மு.க. விளையாட்டு அணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
13 Sep 2025கோவை : அ.தி.மு.க.வில் உள்ள விளையாட்டு அணியிலும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
-
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிப்பு? ஐ.நா. அறிக்கைக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு
13 Sep 2025பியாங்யாங், வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐ.நா.
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
13 Sep 2025சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை? வெளியான புதிய தகவல்கள்
13 Sep 2025புதுடெல்லி. வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
காங்கோவில் பயங்கரம்: 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி
13 Sep 2025கின்சாஹா : காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐ.நா. தீர்மானத்துக்கு 142 நாடுகள் ஆதரவு : அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு
13 Sep 2025நியூயார்க் : பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
-
வரும் 20-ம் தேதி நடைபெற இருந்த நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
13 Sep 2025நாகை, நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை : தமிழக தலைமைத்தோ்தல் அதிகாரி தகவல்
13 Sep 2025சென்னை : தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.
-
பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு
13 Sep 2025பழநி, பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
-
கர்நாடகாவில் விநாயகா் சிலை ஊா்வல விபத்தில் 9 போ் பலி : பிரதமர் மோடி இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
13 Sep 2025புதுதில்லி : கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சனி
-
இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி
13 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையால் அதிர்ச்சி சம்பவம் நிளவியுள்ளது.