முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெம்டெசிவிர் மீதான சுங்க வரி நீக்கம்: மத்திய அமைச்சர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மீதான சுங்க வரி நீக்கப்படுவதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா அறித்துள்ளார்.

கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மகராஷ்டிரா, உத்தரப் பிரதேச மாநிலங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்துகளை ஏற்றுமதி செய்யக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும், மகராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ரெம்டெசிவர் மருந்துகளை சிலர் கள்ளச்சந்தையில் பதுக்கி அதிகமான விலைக்கு விற்பனை செய்வதும், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி லாபம் பார்ப்பதும் தொடர்ந்து வருகிறது. இதைத் தடுக்க மகராஷ்டிர அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல உத்தரப் பிரதேச அரசும் கடும் நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தனது டுவி்ட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், மருந்துகள் துறையின் பரிந்துரை மீதான உடனடி தேவையை கருத்தில் கொண்டு, ரெம்டெசிவிர் மற்றும் அதன் ஏ.பி.ஐ. / கே.எஸ்.எம். மீதான சுங்க வரியை வருவாய்த்துறை நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை நாட்டில் ரெம்டெசிவர் ஊசி கிடைப்பதை அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து