Idhayam Matrimony

அமெரிக்காவில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ உபகரணங்கள் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்டவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், பல உலக நாடுகள் இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு சர்வதேச நாடுகள், எல்லைகளைக் கடந்து இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதாக உறுதியளித்தார். அமெரிக்காவில் கொரோனா பேரிடரின் தொடக்க காலத்தில் இந்தியா உதவி செய்தது போல, இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும் என ஜோ பைடன் தெரிவித்திருந்தார். அந்த வகையில் ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் இரண்டு விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்கா பாதுகாப்பு துறை அமைச்சர் ஆஸ்டின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆக்சிஜன் சிலிண்டர்கள், கொரோனா பரிசோதனை கருவிகள், என்-95 மாஸ்க்குகள் மற்றும் பல்ஸி ஆக்சிமீட்டர்களுடன் இரண்டு ராணுவ விமானங்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் 15 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவினை அளிக்கும் 9.6 லட்சம் கருவிகள் இதில் இடம்பெற்றுள்ளதாகவும், ஒரு லட்சம் என்-95 மாஸ்க்குகள் இருப்பதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதே போல ரஷ்யாவில் இருந்து 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 75 வென்ட்டிலேட்டர்கள் உள்ளிட்ட 22 மெட்ரிக் டன் பொருட்களுடன் 2 விமானங்கள் இந்தியா வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து