முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை மேலும் நீட்டித்தது இந்தியா

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை இந்தியா மேலும் நீட்டித்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில், இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி அனைத்து திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்களும் தடைசெய்யப்பட்டது.

இயல்பு நிலை திரும்பாததால் இந்த தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் பயணிகளின் தடையற்ற பயணத்திற்காக இந்தியா பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் சர்வதேச விமானங்களை இயக்குகிறது. 

தற்போது, கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன. 

இந்நிலையில், சர்வதேச விமானங்களுக்கான தடை மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.) வெளியிட்டுள்ளது. 

இந்த தடை உத்தரவானது, சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் டி.ஜி.சி.ஏ.வால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு பொருந்தாது. இருப்பினும், சூழ்நிலைகளின் அடிப்படையில், அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட வழித்தடங்களில் சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்படலாம் எனவும் டி.ஜி.சி.ஏ. கூறி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து