முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பை தடுக்க இயற்கை மருத்துவ முறைகளை பயன்படுத்தலாம்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கருத்து

சனிக்கிழமை, 1 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : யோகா, இயற்கை மருத்துவ முறைகளை கொரோனா தடுப்பு முறைகளாக பயன்படுத்தலாம் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.  தொழில் நிறுவனங்கள் தாராள மனதோடு அரசுக்கு உதவிகள் வழங்க வேண்டும் என்று அரசு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் முகக்கவசம், கிருமிநாசினி, வென்டிலேட்டர், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றைச் சுகாதாரத் துறைக்கு வழங்கி வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக நேற்று புதுச்சேரி ராஜ்நிவாஸில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில், விழுப்புரம் தனியார் கல்விக் குழுமம் 10,000 கிருமிநாசினி புட்டிகளை சுகாதாரத் துறைக்கு வழங்கியது.  மேலும், புதுச்சேரி சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பாளர்கள் சங்கம் ரூ. 50,000 மதிப்பிலான 25 கிலோ கபசுரக் குடிநீர் சூரணம், 36 லிட்டர் கிருமிநாசினி, 25 அடைப்புகள் கபசுரக் குடிநீர் கசாயம் வழங்கியது. சுகாதாரத் துறைச் செயலர் அருண அவற்றைப் பெற்றுக் கொண்டார். பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரசுக்கு உதவ முன்வந்த நிறுவனங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல மேலும் நிறுவனங்கள் உதவி செய்ய முன்வர வேண்டும். புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.  மருத்துவக் குழுக்கள் வீடு வீடாக சென்று சிகிச்சை அளிப்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கான கட்டணம் ரூ. 500 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.  மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் கொரோனா பாதிப்பைத் தடுக்க இயற்கை மருந்துகளைப் பரிந்துரை செய்து வருகிறது.

அரசு மூலமாக ஒப்புதல் அளித்து மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கவும், சில இயற்கை மருத்துவர்கள், இந்திய மருத்துவ முறையைத் தனியாக மருத்துவமனை அமைத்து கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஒன்றிரண்டு மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது.  இன்றைய காலகட்டத்தில் யோகா, இயற்கை மருத்துவ முறைகளை கொரோனா தடுப்பு முறைகளாகப் பயன்படுத்தலாம். ரெம்டெசிவிர் மருந்து எல்லோருக்கும் தேவைப்படாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். மருத்துவர்களும், தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும்.

பொதுமக்களின் விழிப்புணர்வு, கட்டுப்பாடுகளால் மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்க முடியும். கொரோனா ஒரு தொற்று, அந்த தொற்று பரவாமல் இருக்க நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொருவரின் மனதிலும் இருக்க வேண்டும். ரெம்டெசிவிர், மருந்துகள், ஆக்ஸிஜன் ஆகியவை போதிய அளவு இருப்பு இருக்கிறது. ஆகவே, அரசுடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து