Jankumar 2021 05 02

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார். 

புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஒரு அணியாகவும், காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு ஒரு அணியாகவும் போட்டியிட்டது.  இதுதவிர அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. சுயேச்சைகள் என 30 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16, பா.ஜனதா 9, அ.தி.மு.க. 5 தொகுதிகளில் போட்டியிட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15, தி.மு.க. 13, இந்தியகம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டது.  இதில் ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை.

இதனால் 14 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிட்டது. தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த மாதம் 6-ம் தேதி நடந்தது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் புதுவையில் தாகூர் கலைக்கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக், மோதிலால் நேரு ஆண்கள் பாலிடெக்னிக் ஆகிய இடங்களிலும், காரைக்காலில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியிலும், மாகி, ஏனாமில் மண்டல நிர்வாக அலுவலகங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காமராஜ் நகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஜான்குமார் 16303 வாக்குகளும், 384 தபால் வாக்குகளும் பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜகான் 9208 வாக்குகளும், 250 தபால் வாக்குகளும் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜகானை விட 7229 வாக்குகள் கூடுதலாக பெற்று பா.ஜ.க. வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார்.


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil Comedy



Rhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kids



கிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review



இன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7



அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து