முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

செவ்வாய்க்கிழமை, 6 ஜனவரி 2026      தமிழகம்

தஞ்சாவூர், திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு, தஞ்சாவூருக்கு இன்று உள்ளூர் விடுகுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சங்கீதத்தின் தந்தை என போற்றப்படும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் நினைவாக ஆண்டுதோறும் திருவையாற்றில் நடைபெறும் ஆராதனை விழாவில், நாடு முழுவதிலும் இருந்து இசைக் கலைஞர்கள், பக்தர்கள், இசை ஆர்வலர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். குறிப்பாக பஞ்சரத்தின கீர்த்தனைகள் இசைக்கப்படும் நிகழ்வு, இந்த விழாவின் முக்கிய அம்சமாகும்.

இவ்விழாவை நேரில் காணவும், கலந்து கொள்ளவும் தஞ்சாவூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் பெருமளவில் மக்கள் வருகை தருவது வழக்கம். இதன் காரணமாக போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான ஏற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதி, தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து