Idhayam Matrimony

மும்பைக்கு எதிரான தோல்வி பெரிதாக காயப்படுத்தவில்லை: சென்னை கேப்டன் டோனி கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      வர்த்தகம்
Image Unavailable

பெரிய ஹிட்டர்கள் உள்ள அணிக்கு எதிராக இலக்கை நோக்கி சரியாக நாங்கள் வீசவில்லை. திட்டங்களை சரியாக செயல்படுத்துவது அவசியம். 20-வது ஓவரில் சிக்சர்களை கட்டுப்படுத்தியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்கிறார் டோனி.

சனிக்கிழமை இரவு டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் 218 ரன்களைக் குவித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றது குறித்து டோனி கூறும்போது ‘அட்டவணையில் டாப்பில் இருப்பதால் பெரிதாகக் காயப்படுத்தவில்லை’ என்று தோல்வியைப் புறந்தள்ளினார்.

முதலில் பேட் செய்த சி.எஸ்.கே அணி டுபிளெசிஸ், மொயின் அலி அமைத்துக் கொடுத்த அருமையான இரட்டை அரைசத அடித்தளத்தில் பிற்பாடு ராயுடு புகுந்து விளையாடி, பும்ராவையே என்ன சேதி என்று கேட்டு 7 சிக்சர்களுடன் 27 பந்துகளில் 72 விளாச 218 ரன்களை எட்டியது, அதுவும் ஒரு கட்டத்தில் பொலார்ட் ஹாட்ரிக் வாய்ப்புப் பெற 116/4 என்று தடுமாறிய இடத்திலிருந்து ராயுடு எகிறினார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பொலார்ட் ஒரு படிமேலே போய் 87 ரன்களை விளாசி தள்ள அசுரத்தனமான அடியில் 219 ரன்களை விரட்டி ஐ.பி.எல் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய விரட்டலைச் சாதித்தது மும்பை இந்தியன்ஸ்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் கேப்டன் கூல் டோனி கூறியதாவது:-

இது ஒரு பிரில்லியண்ட் பிட்ச், இரு அணிகளுக்குமான வித்தியாசம் திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்தது. நாங்கள் அதில் வெகுதொலைவில் பின் தங்கி விட்டோம். பவுலர்களை குறைகூற ஒன்றுமில்லை. கேட்ச்கள்தான் உதவும். முக்கியக் கட்டங்களில் கேட்ச்களை கோட்டை விட்டோம். ஆனால் அட்டவணையில் முதலிடம் வகிப்பதால் இது பெரிதாக காயப்படுத்தவில்லை.

பெரிய ஹிட்டர்கள் உள்ள அணிக்கு எதிராக இலக்கை நோக்கி சரியாக நாங்கள் வீசவில்லை. திட்டங்களை சரியாக செயல்படுத்துவது அவசியம். 20வது ஓவரில் சிக்சர்களை கட்டுப்படுத்தியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

இந்த இலக்கை தோற்றது ஏமாற்றம்தான், ஆனால் இது அணியின் ஸ்பிரிட்டை உயர்த்தும். அடி வாங்கும்போதுதான் கற்றுக் கொள்வோம். புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரு ஆட்டம் என்பதாகவே எடுத்து ஆடுகிறோம். இதைச் செய்தால் போதும் புள்ளிகள் தானாக வரும் என்று டோனி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து