முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.ஐ. உச்சி மாநாட்டை நடத்த இந்தியா மிக சரியான இடம்: ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு

திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2026      உலகம்
Antonio 1

நியூயார்க், உலகின் மிகவும் வெற்றிகரமான வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ள இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம் என்று ஐ.நா.சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா-செயற்கை நுண்ணறிவு தாக்கம் குறித்த உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாடு வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாடு மற்றும் கண்காட்சிக்கு சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்பட 20 நாடுகளின் தலைவர்கள், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அடோப் சிஇஓ சாந்தனு நாராயண் உள்ளிட்ட ஏஐ துறை சார்ந்த பல்வேறு நிபுணர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஐ.நா.சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஐ.நா.தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஏஐ தாக்க உச்சி மாநாட்டை நடத்துவதற்காக இந்தியாவை மனதார வாழ்த்துகிறேன். மனித குலத்தின் நன்மைக்காக செயற்கை நுண்ணறிவு தன்னை வளர்த்து கொள்வதும், உலகளாவிய கருவியாக மாறுவதும் மிகவும் அவசியம். உலகின் மிகவும் வெற்றிகரமான வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ள இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம்.

ஏ.ஐ.யின் ஆற்றல் மற்றும் அதன் அனைத்துவித ஆபத்துகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்படுவதை உறுதி செய்யவும், ஏஐ முழு உலகிற்கும் என்பதை உறுதி செய்யவும் இந்தியா பொருத்தமான இடம். இந்தியாவை வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் மையமாக நான் பார்க்கிறேன். இந்தப் பன்முக உலகத்தை வடிவமைப்பதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்களிப்பின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து