முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். தொடர் 27-வது லீக் ஆட்டம்: பொலார்ட் அதிரடியில் மும்பை வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. மும்பை வீரர் பொலார்ட் 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் குவித்து கடைசி பந்தில் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

சென்னை அதிரடி

முதலில் பேட் செய்த சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர் முடிவில் 218 ரன்களைக் குவித்தது. அம்பத்தி ராயுடு அதிரடியாக ஆடி 75 ரன்களைக் குவித்தார். அதனையடுத்து, 219 ரன்கள் என்ற கடின இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. 

டி காக் 38 ரன்...

மும்பை அணியில் ரோஹித் சர்மா-டி காக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவர்களில் 71 ரன்கள் சேர்த்தது. ரோஹித் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த சூர்யகுமார் 3 ரன்களில் வெளியேற, டி காக் 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பொலார்ட் அதிரடி

இதன்பிறகு 4-வது விக்கெட்டுக்கு இணைந்த கிரண் பொலார்ட்-கிருணால் பாண்டியா ஜோடி அதிரடியாக ஆட, 14.4 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது மும்பை. தொடர்ந்து வேகம் காட்டிய பொலார்ட் 17 பந்துகளில் அரை சதம் கண்டார். மும்பை அணி 16.3 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்திருந்தபோது கிருணால் பாண்டியாவின் விக்கெட்டை இழந்தது. கிருணால் பாண்டியா 23 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

ஹார்திக் பாண்டியா

இதையடுத்து ஹார்திக் பாண்டியா களமிறங்க, பொலார்ட் 68 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சை டூபிளெஸ்ஸிஸ் கோட்டைவிட்டார். சாம் கரன் வீசிய 19-வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசிய ஹார்திக் பாண்டியா, அதே ஓவரில் டூபிளெஸ்ஸிஸிடம் கேட்ச் ஆனார். அவர் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரின்...

இதன்பிறகு களம்புகுந்த ஜேம்ஸ் நீஷம் அதே ஓவரின் கடைசிப் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் மும்பை வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. லுங்கி கிடி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காத பொலார்ட், அடுத்த இரு பந்துகளில் பவுண்டரிஅடித்தார். 4-வது பந்தில் ரன் எடுக்கவில்லை.

87 ரன்கள் குவிப்பு...

5-வது பந்தில் சிக்ஸரை விளாச, கடைசிப் பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அதில் பொலார்ட் இரு ரன்களை எடுக்க, மும்பை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. பொலார்ட் 34 பந்துகளில் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.சென்னை தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாகும். அதேநேரத்தில் சென்னை அணி 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் 2-வது தோல்வியை சந்தித்துள்ளது.

ஒற்றை நபராக....

9 ஓவரில் 81 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறிய போது களமிறங்கிய கைரன் பொல்லார்டு ஆட்டத்தின் போக்கை மாற்றினார். யாருடைய பந்துவீச்சும் அவருடைய ஆட்டத்திலிருந்து தப்பவில்லை. இறுதி ஓவரில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நிகிடி பந்துவீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட பொல்லார்டு ரன் ஏதும் எடுக்கவில்லை. 

அடுத்த இரண்டு பந்துகளில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். 4-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் 5 பந்தில் சிக்ஸ் அடித்து அசத்தினார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டு ரன்களை எடுத்தார் பொல்லார்டு. 34 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் பொல்லார்டு. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து