முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து 2-வது முறையாக கேரளாவில் ஆட்சியை கைப்பற்றும் இடதுசாரி

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரள அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக ஆளும் கட்சி 2-வது முறையாகத் தொடர்ந்து ஆட்சியில் அமரவுள்ளது. முதல்வர் பினராய் விஜயன் மீதான நம்பிக்கையை மக்கள் இந்தத் தேர்தலில் எதிரொலித்துள்ளனர். 

இதுவரை கேரளாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என இரு கட்சிகள்தான் மாறி மாறி அரியணையை அலங்கரித்துள்ளன. முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் அமர்கிறது. 140 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு 71 இடங்கள் தேவை. ஆனால், மாநிலத்தில் 91 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடர்ந்து முன்னிலையில் இருந்து மீண்டும் 2-வது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. 

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்தான் சட்டசபை தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாக அமைந்தது. அந்தத் தேர்தலில் எல்.டி.எப் கூட்டணி அமோகமான வெற்றியைப் பெற்றது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இரு முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்பது, மறைந்த முன்னாள் முதல்வர்களான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், கருணாகரன் ஆகியோரின் கனவாக இருந்தது. அந்தக் கனவை பினராய் விஜயன் நிறைவேற்றி உள்ளதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து