முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தாமரை மலர்ந்தது: எங்கள் சபதம் நிறைவேறியது: எல்.முருகன் பெருமிதம்

திங்கட்கிழமை, 3 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : எங்கள் சபதம் நிறைவேறிவிட்டது என்று எல். முருகன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல். முருகன் வெளியிட்ட அறிக்கையில், 

மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பா.ஜ.க. மக்களுக்காக உழைப்பதில் என்றும் பின்வாங்கியதில்லை. 

தமிழகத்தில் தாமரை மலராது என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்கள் மத்தியில், 2021-ல், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையை அலங்கரிப்பார்கள் என்று சபதம் ஏற்றிருந்தோம். இன்று அது நிறைவேறி இருக்கிறது. 

20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க. பெற்றிருக்கிறது. எம்.ஆர். காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், டாக்டர் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்களது அனுபவம், தொலைநோக்குச் சிந்தனை ஆற்றல் தமிழக மக்களுக்கு பெரிதும் பயன்படும். 

சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்திட்ட கட்சியினருக்கும் தொண்டர்களுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 76 இடங்களை வழங்கிய தமிழக மக்களுக்கும் பா.ஜ.க. சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2001-ஆம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெற்றிருந்தது. அப்போது, 21 தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சி, காரைக்குடி, மயிலாடுதுறை, மயிலாப்பூா், தளி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

20 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று பேரவையில் நுழைந்த பா.ஜ.க., இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வென்று மீண்டும் பேரவைக்குச் செல்ல உள்ளது .

நாகா்கோவில், திருநெல்வேலி, கோவை தெற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க. வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து