முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்ற ஆஸி. வீரர்கள் நாடு திரும்பும் விவகாரம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிட்னி : ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்பும் விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸி. அரசின் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்று தெரிவித்துள்ளது.

கொரோனா சூழல் காரணமாகவும், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ஐ.பி.எல் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது குறித்த கேள்விகளும் எழுந்தன. இதையடுத்து ஐ.பி.எல் 2021 போட்டி ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவித்துள்ளது. 

வீரர்கள் மற்றும் அணிகளின் பாதுகாப்பு கருதி ஐ.பி.எல் 2021 போட்டி ஒத்திவைக்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்ற அனைவரும் பாதுகாப்பாகப் பயணம் செய்து வீடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை பி.சி.சி.ஐ செய்து தரும். ஐ.பி.எல் போட்டியை நடத்துவதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியப் பயணிகள் விமானங்களுக்குப் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளதால் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்கு எப்படித் திரும்புவார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

இந்தியப் பயணிகள் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில் தங்கள் நாட்டை தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது. மே 15 வரை இந்தத் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பயணிகள் விமானங்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளதால் ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள், தங்களுடைய சொந்த ஏற்பாட்டில் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்ப வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் சில நாள்களுக்கு முன்பு தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துடன் இணைந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்ற ஆஸி. வீரர்கள், நிர்வாகிகள் பாதுகாப்புடன் சொந்த நாட்டுக்குத் திரும்புவது குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பி.சி.சி.ஐயிடம் தொடர்பு கொண்டு வருகிறோம்.

இந்தியப் பயணிகள் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு மே 15 வரை தடை விதித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்டு ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்களுக்கென தனியாக விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க மாட்டோம் எனக் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து