முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024-25 நிதியாண்டில் ஜி.எஸ்.டி. ரூ. 22.08 லட்சம் கோடி வசூல்

திங்கட்கிழமை, 30 ஜூன் 2025      இந்தியா
GST-2023-05-01

Source: provided

புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜி.எஸ்.டி.) ஒட்டுமொத்த வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ. 22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

திங்கள்கிழமை(ஜூன் 30) வெளியான மத்திய அரசு தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அதற்கும் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 9.4 சதவீதம் அதிகமாகும். இதன்மூலம் கடந்த ஐந்தே ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வசூல் இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், 2021-ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 11.37 லட்சம் கோடியாக இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடும் போது கடந்த நிதியாண்டில் இரட்டிப்பாகியுள்ளது.  2024-25 நிதியாண்டில் மாதாந்திர சராசரி ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டின் மாதாந்திர சராசரி ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.68 லட்சம் கோடியாகவும், 2022-ஆம் நிதியாண்டில் ரூ. 1.51 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. பதிவு செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. வரிதாரர்கள் எண்ணிக்கையும் கடந்த 2017-இல் 65 லட்சம் என்ற அளவிலிருந்து 1.51 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி கடந்த 8 ஆண்டு காலத்துக்குள் நிகழ்ந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து