முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காங். எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

வியாழக்கிழமை, 6 மே 2021      தமிழகம்
Image Unavailable

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் தேர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லி தலைமைக்கு அனுப்பப்படும்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  இவர்களில் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஸ்குமார், ராஜ்குமார், முனிரெத்னம், செல்வ பெருந்தகை ஆகியோர் ஒருமுறைக்கு மேல் எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள். மீதம் உள்ள 12 பேரும் முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்று இருப்பவர்கள். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (வெள்ளி) மாலை 6 மணிக்கு சத்திய மூர்த்திபவனில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இந்த கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் தேர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லி தலைமைக்கு அனுப்பப்படும். அதன் பிறகு டெல்லி மேலிட பார்வையாளர் வந்து எம்.எல்.ஏ.க் களுடன் கலந்து ஆலோசித்து குழு தலைவரை தேர்வு செய்து அறிவிப்பார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து