முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு பயணிக்க வேண்டாம்: அமெரிக்கா உச்சகட்ட எச்சரிக்கை

வியாழக்கிழமை, 6 மே 2021      உலகம்
Image Unavailable

இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என அமெரிக்க அரசு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவை கொரோனா 2-வது அலை உலுக்கி எடுத்து வருகிறது. கொரோனாவால் நாள்தோறும் 3.50 லட்சம் பேருக்கு அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல், ஐ.சி.யு., வசதி கிடைக்காமலும் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் நோயாளிகள் திண்டாடுகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை அமெரிக்க அரசு விடுத்துள்ளது. லெவல்-4 எச்சரிக்கை என்பது அமெரிக்க மக்கள் பயணம் குறித்த உச்சகட்ட எச்சரிக்கையாகும்.

அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருவதால் அமெரிக்க மக்கள் யாரும் இந்தியாவுக்கு பயணிக்க வேண்டாம். இந்தியாவிலிருந்து வெளியேற நினைக்கும் அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேறுங்கள் என எச்சரித்துள்ளது.

கடந்த மாதம் 28-ந் தேதி அமெரிக்க அரசு வெளியிட்ட எச்சரிக்கையில் அமெரிக்காவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் இந்தியாவில் பணியாற்றும்போது அவர்கள் குடும்பத்துடன் வெளியேற வாய்ப்பளித்தது.

அமெரிக்க அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ‘இந்தியாவில் பணியாற்றும் அவசரகால அமெரிக்க அரசு ஊழியர்களும் இந்தியாவிலிருந்து வெளியேறலாம்’ எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து