Idhayam Matrimony

வேதபுரி ஆஸ்ரம பீடாதிபதி சுவாமி ஓங்காரனந்தா முக்தியடைந்தார்: மதுரை ஆதீனம் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      தமிழகம்
Image Unavailable

வேதபுரி ஆஸ்ரம பீடாதிபதி பூஜ்ய ஸ்ரீ  ஓங்காரனந்தா கொரோனா பாதிப்பில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு மதுரை ஆதினம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் வேதபுரி  சித்பவானந்தா ஆஸ்ரம பீடாதிபதி பூஜ்ய ஸ்ரீ  ஓங்காரனந்தா கொரோ ஓங்காரனந்தா சுவாமிகள் கொரோனா தொற்று பாதித்து கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் காலையில்  அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்ல  மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

அதனால் மதியம் மதுரை விமான நிலையத்தில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் வரவழைத்து சென்னைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள்  செய்யப்பட்டன. ஆனால் அவர் உடல்நிலை மேலும் மிகவும் மோசமடைந்ததால் மீண்டும் மதுரை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி மாலை 5.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

ஓம்காரனந்தா சுவாமிகள் திருக்குறள், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட புத்தகங்களில் புலமை படைத்தவர். ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களை உலகம் முழுவதும் உள்ள இந்து ஆன்மீக பக்தர்கள் மத்தியில் பரப்பி வந்தார். இவரது மறைவுக்கு மதுரை ஆதினம் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் ஓங்காரனந்தா சுவாமிகள் ஆன்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவன் சன்னிதானத்தில் நிம்மதியாகவும் மகிழ்வாகவும் வாழ்ந்திட பிரார்த்திக்கின்றோம் என்று குரு மகா சன்னிதானம் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து