MK-Stalin 2020 11-02

Source: provided

சென்னை : ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், நளினி உட்பட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். அப்போது அவர் மக்களோடு மக்களாக கலந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மனித வெடிகுண்டு வெடித்து ராஜீவ் காந்தி ரத்த வெள்ளத்தில் பலியானார். இது தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட சிவராஜன், தனு ஆகியோர் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பிறகு கொலையாளிகள் மற்றும் கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். இவர்களில் பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், நளினி ஆகிய 7 பேர் தமிழக சிறைகளில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

 தண்டனை காலம் முடியும் முன்பே இந்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கடந்த 2014 பிப்ரவரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தன. இவர்களை விடுதலை செய்ய தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 

இந்நிலையில் மீண்டும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் அவர்களது விடுதலை பற்றி முடிவெடுக்கப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கவர்னர் முடிவு ஏதும் எடுக்கவில்லை. இதுகுறித்து, உரிய முடிவெடுக்க வேண்டும் என அப்போதையை எதிர்க்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கவர்னருக்கு வலியுறுத்தி வந்தன. 

இந்த நிலையில் அந்த தீர்மானத்தை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தீவிரமாக ஆராய்ந்து தன் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த ஜனவரி மாதம் 25-ல் அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் ஜனாதிபதி முடிவு செய்வதே உகந்ததாக இருக்கும் என்று அவர் கூறியதாக தெரிகிறது.  

தற்போது தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்துள்ள நிலையில், 7 பேர் விடுதலை குறித்து ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. ஏழு பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், நேற்று சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலின், எழுவர் விடுதலை குறித்து ஆலோசனை நடத்தினார்.  எழுவர் விடுதலை விவகாரத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் கவர்னரின் தாமதம் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil ComedyRhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kidsகிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Reviewஇன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து