முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது இந்திய மகளிர் அணி

வியாழக்கிழமை, 20 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய மகளிர் அணி, பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

இங்கிலாந்து பயணம்

அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் அணி, ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த வருட ஜனவரியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஆஸி. அறிவிப்பு...

இந்நிலையில் செப்டம்பரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்கான அறிவிப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகள், பெர்த் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை விளையாடவுள்ளன. 

முதல் பகலிரவு டெஸ்ட் 

இந்திய அணி விளையாடவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் இது.மேலும் நார்த் சிட்னி ஓவல் மற்றும் ஜங்க்‌ஷன் ஓவல் மைதானங்களில் மூன்று ஒருநாள் ஆட்டங்களும் நார்த் சிட்னி ஓவல் மைதானத்தில் மூன்று டி-20 ஆட்டங்களும் நடைபெறவுள்ளன. 

இந்தியா - ஆஸி. தொடர்கள்:

1) ஒருநாள்: செப். - 19, செப். - 22, செப். - 24.

2) டெஸ்ட்: செப். - 30 - அக். - 3.

3) டி- 20 : அக். - 7, அக். -9, அக். - 11. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து