முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

செவ்வாய்க்கிழமை, 8 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.37 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. 

தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு விலை தொடர்ந்து உயர்ந்து பவுன் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது.  சென்னையில் நேற்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 200 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,630 ஆக இருந்தது.  வெள்ளி கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து 76 ஆயிரத்து 300 ஆக இருந்தது. ஒரு கிராம் ரூ.76.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து