முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவின் இணைய தளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு: மத்திய அரசு

புதன்கிழமை, 9 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கோவின் இணையதள பக்கத்தில் 12-வது மொழியாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ்  செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துபவர்களின் வசதிக்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கோவின் என்ற இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளோர் இந்த இணையதள பக்கத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணையதள பக்கத்தில் தடுப்பூசி போடப்படும் இடம், நேரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், தடுப்பூசி மையங்களுக்கே நேரடியாகச் சென்று அங்கு பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இதற்கிடையே, தடுப்பூசி முன்பதிவிற்காக பயன்படுத்தப்படும் இந்த இணையதளத்தில் தமிழ் மொழி தவிர 11  மொழிகள் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, கோவின் இணைய தளத்தில் படிப்படியாக வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மாநில மொழிகள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது, ஆதலால் அடுத்த இரு தினங்களில் தமிழ் மொழி சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், கோவின் இணையதள பக்கத்தில் 12-வது மொழியாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து