முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜே.பி.நட்டாவுடன் உ.பி. முதல்வர் யோகி சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று சந்தித்து பேசினார். முன்னதாக அவர் பிரதமர் மோடியையும் சந்தித்து பேசினார். 

உத்தரபிரதேசத்தில் 2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அம்மாநிலத்தில் தனது அரசியல் நகர்வுகளை பா.ஜ.க. தற்போதே தொடங்கி விட்டது. உத்தரபிரதேசத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனால், வரும் தேர்தலில் யோகி ஆதித்தநாத்திற்கு பதிலாக வேறு நபரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின.

ஆனால், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2022-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை முதல்வர்  யோகி ஆதித்யநாத்தின் தலைமையின் கீழ் தான் சந்திக்கும் என்று அம்மாநில பா.ஜ.க. தலைவர் சுவேந்திர தேவ் சிங் தெரிவித்தார். இதன் மூலம், 2022 நடைபெற உள்ள உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத் மீண்டும் களமிறங்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.  ஆனால், சட்டசபை தேர்தலை யோகி ஆதித்யநாத்தின் தலைமையின் கீழ் சந்திக்க அம்மாநில பா.ஜ.க. தலைவர்கள் பலர் விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்து பேசினார்.  தனது பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உத்தரபிரதேச தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் இடையே ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

இந்த சந்திப்பிற்கு, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை, யோகி ஆதித்யநாத் சந்தித்தார். யோகி ஆதித்யநாத் மீது பா.ஜ.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா உடனான அடுத்தடுத்த சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து