முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.ஐ.டி. பொறியியல் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியீடு: வரும் 21-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடக்கம்

சனிக்கிழமை, 12 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

வேலூர் : வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர் சேர்க்கை வரும் 21-ம் தேதி தொடங்கி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 2021-22 கல்வியாண்டில் பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேர்வதற்கான சேர்க்கை முடிவுகள் நேற்று (ஜூன் 12) வெளியிடப்பட்டன. இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், துபாய், குவைத், மஸ்கட், கத்தார், பஹரைன், சிங்கப்பூர், மொரீஷியஸ் உட்பட 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்தத் தேர்வு தொடர்பாக வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் கூறுகையில்,

வி.ஐ.டி.யில் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். வரும் 21-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 16-ம் தேதி வரை 4 கட்டங்களாகக் கலந்தாய்வு நடைபெறும்.  வரும் 21 மற்றும் 22-ம் தேதிகளில் தரவரிசை 1 முதல் 20,000 வரையும், வரும் 30 மற்றும் ஜூலை 1-ம் தேதிகளில் தரவரிசை 20,001 முதல் 45,000 வரையும், ஜூலை 8 மற்றும் 9-ம் தேதிகளில் தரவரிசை 45,001 முதல் 70,000 வரையும், ஜூலை 15 மற்றும் 16-ம் தேதி தரவரிசை 70,001 முதல் ஒரு லட்சம் வரையில் இருப்பவர்களுக்குக் கலந்தாய்வு நடைபெறும்.

தரவரிசை 1 முதல் ஒரு லட்சம் வரையிலான மாணவர்களுக்கு வி.ஐ.டி. வேலூர், சென்னை, ஆந்திரப்பிரதேசம் மற்றும் போபால் வளாகங்களில் இடம் கிடைக்கும். ஒரு லட்சத்துக்கும் மேலாகத் தரவரிசை பெற்ற மாணவர்களுக்கு வி.ஐ.டி. ஆந்திரப்பிரதேசம் மற்றும் வி.ஐ.டி. போபாலில் மட்டும்தான் இடம் கிடைக்கும்.

மாணவர் சேர்க்கை முடிவுகளை https://admissionresults.vit.ac.in/viteee என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், வி.ஐ.டி. இணையதளம் வழியாக ஆன்லைன் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம். 

ஜி.வி, பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்புக் கல்வி உதவி, மத்தியக் கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவிலான முதலிடம் பெற்றவர்களுக்கு வி.ஐ.டி.யில் பி.டெக். படிப்பின் 4 ஆண்டுகளும் 100 சதவீதப் படிப்பு கட்டணச் சலுகையும், தர வரிசையில் 1 முதல் 50 வரை இடம் பெற்றவர்களுக்கு 75 சதவீதப் படிப்பு கட்டணச் சலுகையும், தரவரிசையில் 51 முதல் 100 இடம் பெற்றவர்களுக்கு 50 சதவீதக் கட்டணக் சலுகையும், தரவரிசை 101 முதல் 1,000 இடம் பெற்றவர்களுக்கு 25 சதவீத படிப்பு கட்டணக் சலுகையும் ஜி.வி பள்ளி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

அதேபோல், ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் ஒரு மாணவர், ஒரு மாணவிக்கு வி.ஐ.டி.யில் 100 சதவீதக் கல்வி கட்டணச் சலுகையும், இலவச விடுதி வசதி, உணவு வசதி, வி.ஐ.டி. ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும்.  வி.ஐ.டி.யில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகள் மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை www.vit.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து