முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களுக்கு இதுவரை 26 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன : மத்திய சுகாதாரத்துறை தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அனைத்து மாநிலங்களுக்கும் இதுவரை 26 கோடியே 64 லட்சத்து 84 ஆயிரத்து 350 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி இந்த ஆண்டு கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் தடுப்பூசி திட்டத்தில், கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடவும், மாநிலங்களே இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு அனுமதித்தது.

இதற்கிடையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்துவதற்காக வரும் 21-ந் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க இருப்பதாக பிரதமர் மோடி கடந்த 7 ஆம் தேதி அறிவித்தார். இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் இந்த மாத மத்தியில் வர்த்தக ரீதியில் பயன்பாட்டுக்கு வருகிறது. 

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மத்திய அரசு சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் இதுவரை 26 கோடியே 64 லட்சத்து 84 ஆயிரத்து 350 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் (வீண் ஆனவை உள்பட) மொத்தம் 25 கோடியே 12 லட்சத்து 66 ஆயிரத்து 637 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாநிலங்களிடம் தற்போது 1 கோடியே 53 லட்சத்து 79 ஆயிரத்து 233 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், அடுத்த 3 நாட்களில் 4,48,760 தடுப்பூசிகள் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து