முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக விஜயன் நியமனம்: தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக தி.மு.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் செய்யப்படுவதாக, தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஏ.கே.எஸ்.விஜயன் தற்காலிகமாக நியமிக்கப்படுவதாகவும், அவர் ஓராண்டு காலத்திற்கு இப்பதவியில் நீடிப்பார் என்றும், விரைவிலேயே அவர் பதவியேற்றுக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி பிரதிநிதியாக இருப்பவர் தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவார். மாநில அரசின் கோரிக்கைகளை மத்திய அமைச்சரவை முன்பு எடுத்துவைப்பார்.

இங்கிருந்து அனுப்பப்படும் கடிதங்கள், கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகளைக் கவனிப்பார். தமிழக அமைச்சர்களுக்கு இணையான அதிகாரம் பெற்றவர். தலைமைச் செயலகத்துக்கு சென்று அரசு சம்பந்தப்பட்ட எந்தவொரு கோப்புகளையும் ஆய்வு செய்ய முழு அதிகாரமும் இவருக்கு உள்ளது. தமிழக அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் கவனித்து வருவார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து