Idhayam Matrimony

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் ' வில்லியம்சன் ' விளையாடுவார் : டாம் லதம் நம்பிக்கை

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வில்லியம்சன் விளையாடுவார் என டாம் லதம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து வீரர்களும் நல்ல உடற்தகுதியுடன் இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜூன் 18-ம் தேதி... 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு - மைக்கேல் காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர்கள் நடுவர்களாகவும் தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பாரோவும் பணியாற்றவுள்ளார்கள். கிறிஸ் பிராட், போட்டியின் நடுவராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக... 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என நியூசிலாந்து வென்றுள்ளது. 2-வது டெஸ்டில் காயம் காரணமாக நியூசி. கேப்டன் வில்லியம்சன் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக டாம் லதம் கேப்டனாகச் செயல்பட்டார். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் வில்லியம்சன் விளையாடுவார் என டாம் லதம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது.,

தேர்ச்சி பெறுவார்கள்...

வில்லியம்சன், வாட்லிங் ஆகியோர் காயத்திலிருந்து நன்கு மீண்டு வருகிறார்கள். இப்போது அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இதன்மூலம் முழு உடற்தகுதியுடன் விளையாட அவர்கள் தயாராக இருப்பார்கள். அடுத்த இரு நாள்களில் நடைபெறவுள்ள உடற்தகுதிப் பரிசோதனையில் அவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்தின்போது அனைத்து வீரர்களும் நல்ல உடற்தகுதியுடன் இருப்பார்கள் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து