முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழிப்புடன் இருங்கள்: கொரோனா இன்னும் நம்முடன்தான் இருக்கிறது: பொதுமக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனெனில், கொரோனா வைரஸ் இன்னும் நம்முடன்தான் இருக்கிறது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-

பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனெனில், கொரோனா வைரஸ் இன்னும் நம்முடன்தான் இருக்கிறது. அது உருமாற்றம் அடைய வாய்ப்புள்ளது. மத்திய அரசு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாகச் செலுத்துவதில் உறுதியாக உள்ளது. 2-வது அலையில், கொரோனா வைரஸ் நம் முன்னால் என்ன மாதிரியான சவால்களைக் கொண்டு வந்திருக்கிறது என்பதைப் பார்த்தோம்.

இன்னும் கூடுதலான சவால்களைச் சந்திக்க தேசம் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை மனதில் வைத்துத்தான் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் கொரோனா முன்கள பணியாளர்களைத் தயார் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி 6 விதமான பணிகளுக்கு கொரோனா  பணியாளர்களை  தயார் செய்யும். அதாவது வீட்டு சிகிச்சை உதவி, அடிப்படை சிகிச்சை உதவி, நவீன சிகிச்சை உதவி, அவசர சிகிச்சை உதவி, மாதிரிகள் சேகரிப்பு உதவி மற்றும் மருத்துவ உபகரணங்கள் உதவி ஆகியவை இந்தப் படிப்பில் தனித்தனியாகக் கற்பிக்கப்படும்.

பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா 3.0 திட்டத்தின் மூலம் ரூ.276 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த சிறப்புப் பயிற்சியின் மூலம் மருத்துவத் துறை அல்லாத சுகாதாரத் துறை வல்லுநர்கள் உருவாக்கப்படுவார்கள். அவர்கள் மூலம் சுகாதாரத் துறைக்கு வருங்காலத்தில் தேவைப்படும் மனிதவளம் பூர்த்தி செய்யப்படும்.

இது போன்ற 111 மையங்கள் நேற்று  முதல் நாடு முழுவதும் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டன. இதன் மூலம், அடுத்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய திறமையான சுகாதார முன்னணி பணியாளர்களை உருவாக்கும்.  நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆக்சிஜன் தேவையை உறுதி செய்யும் வகையில் சுமார் 1,500 ஆக்சிஜன் பிளாண்ட்டுகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து