முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி எப்போது? - அமைச்சர் சேகர் பாபு பதில்

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தமிழகத்தில் தொற்று பாதிப்பால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என்ற நிலை எப்பொழுது  வருகிறதோ அப்போது கோவில்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது, கோவில் யானை பார்வதிக்கு தாய்லாந்து கண் மருத்துவர்கள் மூலம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், மீனாட்சி அம்மன் கோவிலில் அடுத்தாண்டு நடைபெற உள்ள குடமுழுக்கு குறித்தும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

பின்னர்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தொற்று பாதிப்பால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை என்ற நிலை எப்பொழுது  வருகிறதோ அப்போது கோவில்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.  கோவிலில் உள்ள நகைகள், ஆபரணங்கள் குறித்த ஆவணங்களை இணையத்தில் வெளியிட முடியாது. பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என்பதால் வெளியிட முடியாது. தீ விபத்தால் சேதம் அடைந்த வீர வசந்தராயர் மண்டபம் விரைவில் புனரமைக்கப்படும் என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து