வட மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் 68 பேர் பலி பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண உதவி அறிவிப்பு

modi-conodlance 07 12

Source: provided

லக்னோ: உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் கடந்த 2 நாட்களில் மின்னல் தாக்கி 68 பேர் உயிரிழந்துள்ளனர்.உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோட்டா, ஜலாவா, டோல்பூர் மாவட்டங்களில் மின்னல் தாக்கி 20 பேர் மாண்டனர். ஜெய்ப்பூரில் அமீர் அரண்மனை முன் நின்று செல்பி எடுத்துக் கொண்டு இருந்த போது மின்னல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் ஆணையிட்டுள்ளார். இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மின்னல் தாக்கிய சம்பவத்திற்கு மத்தியில் உத்தராகண்டில் பெய்து வரும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மின்னல் தாக்கியதால் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர்  நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகையையும் அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் சில பகுதிகளில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து துயருற்றேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து