அமைச்சரவை குழுக்கள் மாற்றியமைப்பு: ஸ்மிருதி இராணிக்கு முக்கிய இடம்

Smriti-Irani 2021 07 13 0

Source: provided

புது டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை குழுக்களும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.

அதில், முக்கிய குழுவாக உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் ஸ்மிருதி இராணி, பூபேந்தர் யாதவ் மற்றும் சர்பானந்த சோனவல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த குழுவில் ராஜ்நாத், அமித்ஷா, நிதின் கட்காரி, தோமர், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், கிரிராஜ் சிங், மனுசுக் மாண்ட்வியா, ஆகியோர் உள்ளனர். 

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் தலைமையிலான பார்லிமென்ட் விவகாரங்களுக்கான குழுவில், வீரேந்திர குமார், கிரண் ரிஜ்ஜூ, அனுராக் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏற்னவே இந்த குழுவில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், தோமர், அர்ஜூன் முண்டா, பிரஹலாத் ஜோஷி, ஆகியோர் உள்ளனர். அர்ஜூன் ராம் மேவால், முரளிதரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் இருக்கின்றனர். 

பாதுகாப்பு தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை குழுவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த குழுவில் பிரதமர் மோடி, ராஜ்நாத், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து