வெற்று பேச்சு இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழியில்லை ராகுல் காந்தி விமர்சனம்

Rahul-gandhi 2021 07 14

Source: provided

புது டெல்லி: வெற்று பேச்சு இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழியில்லை என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. டெல்லி, மராட்டியம், தமிழகம் ஆகிய மாநில முதல்வர்களும் தடுப்பூசி வேண்டி பிரதமருக்கு கடிதம் எழுதிய வண்ணம் உள்ளனர்.  கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை 60 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்நிலையில், வெற்று பேச்சு இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழியில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு வெற்று பெருமைக்காக பல அறிவிப்புகளை வெளியிடுகிறது. தடுப்பூசி திட்டம் மந்தமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து