11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு ம.பி.யில் 25-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

School 2021 07 14

Source: provided

போபால்: மத்தியப் பிரதேசத்தில் வரும் 25-ம் தேதி முதல் 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இது குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

கொரோனா வழிகாட்டுகள் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து 50 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும்.  கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வரும் 25-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து 50 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து