முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரக்‌ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ரிச்சர்ட் அந்தோணி.

வெள்ளிக்கிழமை, 16 ஜூலை 2021      சினிமா
Image Unavailable

Source: provided

இப்படத்தை  ஹொம்பாலே ஃபிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார். படம் பற்றி தயாரிப்பாளர் கூறுகையில்,

எங்களின் ஹொம்பாலே ஃபிலிம்ஸின் 10வது படத்தில் ரக்‌ஷித் ஷெட்டியுடன் கைகோர்ப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இந்தப் படம் புத்துணர்ச்சியூட்டும் படமாக இருக்கும். நிமிடத்துக்கு நிமிடம் அடுக்கடுக்கான மர்மங்கள் நிறைந்த திரைப்படம். இந்தப் படத்தின் தயாரிப்பு 2022ல் தொடங்கும். இந்தப் படம் உங்கள் அனைவரையும் குதூகலிக்கச் செய்யும் என்று தயாரிப்பாளர் திரு. விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார்.

படத்தைப் பற்றி ரக்‌ஷித் ஷெட்டி கூறும்போது, "ரிச்சர்ட் அந்தோணி உலிடவரு கண்டந்தி" எனும் திரைப்படத்தை  விடவும் இன்னும் சுவாரஸ்யமானது பிரம்மாண்டமானது. பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் உலிடவரு கண்டந்தி எழுதும் போது அதற்கு அடுத்த பாகம் எடுப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. எல்லாமே விதிப்படி நடக்கும் என்பதுபோல் இது குறித்தும் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கும் போல. இந்தக் கதை ஏற்கெனவே இருக்கும் ஒரு கதை. அதற்கான நேரம் வாய்த்தபோது அதை நான் வடித்திருக்கிறேன். அப்படித்தான் நான் இப்போது உணர்கிறேன். இதன் அடுத்தக் கட்டத்தையும் நான் எழுதுவேன். இந்த உலகம் வாஞ்சையுடன் அதற்கான வாய்ப்பை எனக்கு நல்கும் என நம்புகிறேன் என்றார்.

மேலும், ஹொம்பாலே நிறுவனத்துடன் இணைந்திருப்பதே மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம். எங்களின் நட்பு என்றென்றும் தொடரும் என ஆழமாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து