முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் தூதரின் மகளை கடத்தியவர்களை 48 மணி நேரத்தில் கைது செய்ய இம்ரான்கான் அதிரடி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2021      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் தூதரின் மகளை கடத்தியவர்களை 48 மணி நேரத்தில் கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானில் பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் ஜின்னா சந்தை அருகே சில்சிலா அலிகில் கடத்தப்பட்டு இரவு 7 மணியளவில் காயமடைந்த நிலையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் ஆப்கான் தூதரின் மகள் கடத்தலில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமதுவுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்லாமாபாத் காவல் துறையும் பிற சட்ட அமலாக்க நிறுவனங்களும் இந்த சம்பவத்தை முன்னுரிமை கொடுத்து  விசாரிக்க வேண்டும், இந்த விஷயத்தின் உண்மையை கொண்டு வர வேண்டும் மற்றும் குற்றவாளிகளை 48 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்று பிரதமர் உள்துறை அமைச்சருக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளார். 

அதன்படி, இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரித்து சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து