முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று பக்ரீத் பண்டிகை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். உள்பட தலைவர்கள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ், ஆகியோர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் விட்டுக்கொடுத்தலும், ஈகை புரிதலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும். அனைவர் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

கே.எஸ்.அழகிரி:சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும்.

ராமதாஸ் :தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் பக்ரீத் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேய திருவிழாவாகும்.

வைகோ: சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாளில் மதச் சார்பின்மையைக் காக்கவும், சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் அனைவரும் உறுதிகொள்வோம்.

ஜி.கே.வாசன்:கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள சூழலில் இஸ்லாமியர்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து, பக்ரீத் பண்டிகையை கொண்டாடி பாதுகாப்பாக வாழ வேண்டும்.

அன்புமணி: அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், மகிழ்ச்சி, வளம் உள்ளிட்ட அனைத்தும் தழைத்தோங்க வேண்டும். அத்தகைய நிலையை உருவாக்குவதற்கு உழைக்க இந்த நன்னாளில்  சபதம் ஏற்போம்.

சரத்குமார்: உள்ளத்  தூய்மையுடன் கூடிய நம்பிக்கையின் மூலமே இறை அருளை பெற முடியும் என்கின்ற  நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு, உலகில் அமைதியும்,  மகிழ்ச்சியும் நிலைபெற தூய உள்ளத்துடன் பிரார்த்திப்போம். 

ஏ.சி.சண்முகம்: இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு அளிப்பதே ஈகை. ஈகை செய்வதன் மூலம் இறைவனின் பேரன்பை பெறலாம் என்பது இஸ்லாமியர்களின் இறை  நம்பிக்கையாகும். 

இதே போல தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், வி.சி.க. தலைவர் திருமாவளவன், திராவிடர் மனித சங்கிலி தலைவர் செங்கை பத்மநாதன், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தேசிய தலைவர் ஹென்றி உள்ளிட்ட தலைவர்களும் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து