முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள்: ஹாட்ரிக் வாய்ப்பை தவற விட்ட செகல்

செவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொழும்பு: கொழும்புவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய லெக் ஸ்பின்னர் யஜூவேந்திர செகல் துரதிர்ஷ்டவசமாக ஹாட்ரிக் வாய்ப்பை நழுவ விட்டார்.

இந்தியா முன்னிலை...

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்று முன்னிலை பெற்றுள்ளது. 

மாற்றம் இல்லை...

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. 2-வது ஒருநாள் போட்டியில் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் மேற்கொள்ளாமல் இந்திய அணி களமிறங்கியது. இலங்கை அணியில் ஒரே ஒரு மாற்றம் மேற்கொண்டுள்ளது. 

வெல்லும் முனைப்பில்...

மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றிப்பெற்றதையடுத்து, 2-வது போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் இருந்தனர். 

பேட்டிங் தேர்வு...

இலங்கை டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை தொடக்க வீரர்கள் அவிஷ்க்கா பெர்னாண்டோ, மினோத் பனுகா அருமையான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சேர்ந்து 79 பந்துகளில் 77 ரன்கள் தொடக்கக் கூட்டணி அமைத்து நன்றாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது 14வது ஓவரை வீச வந்தார் செகல். மினோத் பனுகா 36 ரன்களில் 6 பவுண்டரிகள் என்று நன்றாக ஆடிவந்தார் முதல் போட்டியை விட ஆக்ரோஷமாகவே ஆடினார்.

மினோத் பனுகா... 

இவர் செகல் பந்தை மேலேறி வந்து அடித்தார் ஷாட் சரியாகச் சிக்காமல் மிட்விக்கெட்டில் மணீஷ் பாண்டே கையில் போய் உட்கார்ந்தது, முதலில் ஸ்லிப்பில் பாண்டே ஒரு கேட்சை விட்டதனால்தான் இந்த கூட்டணி ரன் எண்ணிக்கையே இந்த அளவுக்கு வந்தது. மினோத் பனுகா ஆட்டமிழந்தவுடன் அபாய வீரர் பனுகா ராஜபக்சே இறங்கினார். டாப் ஸ்பின்னரை வீசினார் செகல், பந்து ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகி எட்ஜ் ஆனது இஷான் கிஷன் நல்ல கேட்சை எடுக்க டக் அவுட் ஆனார்.

ஹாட்ரிக் வாய்ப்பு...

செகல் ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார். தனஞ்ஜயா இறங்கினார், இவரையும் வீழ்த்தி ஹாட்ரிக் எடுப்பாரா என்ற ஆவல் எழுந்தது, அது ஒரு ஃபுல் கூக்ளி பந்து கால்காப்பில் பட்டு மிட்விக்கெட்டிற்குச் சென்றது, ஒரு அரைகுறை முறையீடு எழுப்பினார் செகல். இந்த வாய்ப்பை அவர் நழுவ விட்டு விட்டார், அது அவருக்கே தெரிந்திருந்தது. இலங்கை அணி அப்போது 19-வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்களை எடுத்திருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!