எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ரோகித், மயங் அகர்வால் விக்கெட்களை இழந்து திணறி வருகிறது.
ரோகித் கேப்டன்...
இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுகிறார். விராட் கோலி இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் தேர்வாகியுள்ளார். எதிரணியான கவுண்டி செலக்ட் அணியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் ஆடினர்.
பயிற்சி ஆட்டம்...
இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக சென்றுள்ள விராட் கோலி தலைமை இந்திய அணி செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் கவுண்டி செலக்ட் லெவன் அணிக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ரோஹித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கியுள்ளார்கள்.
3 விக்கெட்கள்...
இந்திய அணியில் கோலி இல்லை. எதிரணியான கவுண்டி செலக்ட் அணியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் ஆடினர். இந்த ஆட்டம் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டம் டர்ஹம் கிரிக்கெட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் இந்திய அணி பேட் செய்து வருகிறது, ஆனால் இந்திய அணி தட்டுத் தடுமாறி ஆடியது. 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 70 ரன்கள் எடுத்துள்ளது.
ரோகித் சர்மா...
ரோகித் சர்மா, மாயங்க் அகர்வால் தொடக்கத்தில் இறங்கினர். இருவரும் 10 ஓவர்களில் 33 ரன்களை சேர்த்திருந்த நிலையில் 33 பந்துகள் ஆடி 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் சேர்த்த ரோகித் சர்மா 22 வயது வேகப்பந்து வீச்சாளர் லிண்டன் ஜேம்ஸ் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
புஜாரா அவுட்...
35 பந்துகளில் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டிய மாயங்க் அகர்வால் 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சேர்த்த நிலையில் இதே லிண்டன் ஜேம்ஸ் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். இந்தியாவின் சுவர் என்று அழைக்கப்படும் செடேஸ்வர் புஜாரா 47 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஜாக் கார்சன் என்ற 20 வயது ஆஃப் ஸ்பின்னரிடம் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார்.
லிண்டன் ஜேம்ஸ்...
தற்போது ஹனுமா விகாஇ 12 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 3 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர், கவுண்டி செலக்ட் லெவன் தரப்பில் லிண்டன் ஜேம்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025