கொரோனா நிலவர கண்காணிப்புக்கு பிறகே பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து பரிசீலனை: தமிழிசை

Tamilisai 2021 07 21 0

Source: provided

புதுச்சேரி: கொரோனா நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்புக்கு பிறகே பள்ளி, கல்லூரிகளைப் படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் 21-வது வாராந்திர கொரோனா மேலாண்மை சீராய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து  ஆளுநர் தமிழிசை பேசியதாவது, புதுச்சேரியில், இறப்பு விகிதம் மிகவும் குறைந்திருப்பது ஆறுதலைத் தருகிறது. கொரோனா நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்புக்கு பிறகே பள்ளி கல்லூரிகளைப் படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அதற்கு முன்பாக பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிச் செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும். பெற்றோர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

முதல் தவனை தடுப்பூசிப் போட்டுக் கொண்டால் பெருமளவு நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற முடியும். அதனால் தகுதியுடைய அனைவருக்கும் முதல் தவனை தடுப்பூசிச் செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இணைநோய் உள்ளவர்கள், முதியவரகள், விடுபட்ட முன்களப் பணியாளர்கள், பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிச் செலுத்துவதில் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். மூன்றாவது அலையை எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும். . புதிய தொற்றுகள் குறித்தும் நாம் கவனமாகவும், முன்னெச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும். இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து