முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் எழுத்துக்களால் வள்ளுவரை வரைந்த ஓவியருக்கு டுவிட்டரில் முதல்வர் பாராட்டு

புதன்கிழமை, 21 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: வலைதளங்களில் தமிழ் எழுத்துக்களால் வள்ளுவரின் ஓவியத்தை பதிவிட்ட ஓவியர் கணேஷூக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இது குறித்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

சமூக வலைதளப் பதிவில் கணேஷ் என்ற ஓவியக் கலைஞர் தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து என கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து இன்றைய தமிழ் எழுத்துகள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துகளைக் கொண்டு தான் வரைந்த அய்யன் திருவள்ளுவர் ஓவியத்தை பதிவிட்டிருந்தார். அவரது ஓவியத் திறமையைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக தமிழக முல்வர் மு.க.ஸ்டாலின், அன்பின் வழியது உயிர்நிலை என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்! என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து