முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 மற்றும் 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும்: விரைவில் முடிவுகள் வெளியிடப்படும்: சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

புதன்கிழமை, 21 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: 10, 12-ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பொதுத்தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. குறைந்தபட்ச காலத்துக்குள் விரைவாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவியதையடுத்து 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் ரத்து செய்தது. அதில், மாணவர்களின் 12-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40 சதவீத மதிப்பெண்கள், 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30 சதவீத மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜூலை 31-ம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

தனித் தேர்வர்களுக்கு என எந்த ஒரு ஆவணமும் பராமரிக்கப்படாத நிலையில், அவர்களுக்கு விரைவில் தேர்வு நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. தெரிவித்திருந்தது. எனினும் தேர்வுத் தேதி அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து, தேர்வு குறித்துக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் 10 ,12-ம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பொதுத்தேர்வு அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. தற்போது அறிவித்துள்ளது.  மாணவர்கள், தங்களின் உயர்கல்வி சேர்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருக்கும் பொருட்டு, சாத்தியமான வகையில் குறைந்தபட்ச காலத்துக்குள் விரைவாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலும், தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள விரும்பும் மாணவர்கள், தனித் தேர்வர்களாகக் கருதப்பட்டு, இந்தத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து